விஜயகாந்த் அலுவலகத்தில் தவம் கிடந்தது ஏன்? - வைகோ கேள்வி
பூஜ்ஜியம் என்று கூறியவர்கள் விஜயகாந்த் அலுவலகத்தில் தவம் கிடந்தது ஏன்? என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயகாந்த் அவர்கள் மக்கள் நலக்கூட்டணி இணைந்திருப்பது எந்த விதத்திலும் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் எந்த மதிப்பெண்ணும் இல்லை. அது போன்ற நிலை தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.
நேற்று இதற்கு பதிலளித்த வைகோ, ”நாங்கள் பூஜ்யம் தான். ஆனால், பூஜ்யத்தில் இருந்து தான் கணக்கே துவங்குகிறது. எங்களுக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர்.
எங்களைப் பூஜ்ஜியம் என்று கூறும் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. பூஜ்ஜியம் என்று கூறியவர்கள் விஜயகாந்த் அலுவலகத்தில் தவம் கிடந்தது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்பதே தங்கள் கூட்டணியின் குறிக்கோள். மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைய வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment