தெறியின் மலையாள மதிப்பு எத்தனை கோடி தெரியுமா...?
நடிகர் விஜய்க்கு கேரளாவில் உள்ள மாஸ் அறிந்ததே.
தெறி படத்துக்கு அங்கே போட்டா போட்டி. கடைசியில் பிரைடே பிலிம்ஸும், கார்னிவால் பிக்சர்ஸும் இணைந்து தெறியின் கேரள திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளன.
தெறிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பணம் தரப்பட்டுள்ளது. சுமார் 5.6 கோடிகளுக்கு தெறி வாங்கப்பட்டிருப்பதாக கேரளாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
விஜய் படமொன்று இவ்வளவு அதிக தொகைக்கு கேரளாவில் வாங்கப்பட்டது இதுவே முதல்முறை.
முக்கியமாக, இது மலையாள முன்னணி நடிகர்களின் படங்களின் பட்ஜெட்டை விட அதிகம்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment