கோவிலில் தேர்தல் உறுதிமொழி எடுத்த விஜயகாந்த்: வைரல் போட்டோஸ்!
உளுந்தூர்ப்பேட்டை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் உள்ள புகழ்ப் பெற்ற திருத்தலமான பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவிலில், தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களை 100% வாக்களிக்க செய்யவும், எந்த அரசியல் கட்சியிடமும் பணம் பெறாமல் வாக்களிக்க செய்யவும் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஒருகோடி பேர் நேர்மையாக, ஜனநாயக உரிமையான வாக்குப்பதிவை செலுத்துவோம் என்று தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.தலைமைச் செயலகத்தில் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி தலைமையில்,அரசு ஊழியர்கள் நூற்றுக் கணக்கானோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அதனையொட்டி அப்பகுதியில் உள்ள புகழ்ப் பெற்ற திருத்தலமான பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்று இருந்தார். அப்போது,அவர் தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு பெற்று வைரலாகியுள்ளது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment