முடிந்தது படப்பிடிப்பு - தீபாவளிக்கு தூங்கா வனம் ரிலீஸ்
கமல் நடித்துள்ள தூங்கா வனம் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.பாபநாசம் படத்துக்குப் பிறகு கமல் தொடங்கிய படம், தூங்கா வனம். பிரெஞ்சில் வெளியான ஸ்லீப்லெஸ் நைட்டின் தமிழ் தழுவலான இந்தப் படத்தை கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். த்ரிஷா, சம்பத், கிஷோர், பிரகாஷ்ராஜ், யூகி சேது, மது ஷாலினி, ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை.
38 நாள்களில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்.
இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment