ரஷ்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - வீடியோ

Share this :
No comments


துபாயில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற விமானம் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறி விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

துபாய் நாட்டின், ஃபிளைதுபாய் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அந்நாட்டில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற கொண்டிருந்தது.

இந்த விமானம் ரஷ்யாவின் ரோஸ்தோவ்-ஆன்-டானில் தரையிறங்க முயன்றபோது, வெடித்து சிதறியது.

இந்த விபத்திற்கு மேசமான வானிலைதான் காரணம் என்று கூறப்படுகின்றது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 61 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் 59 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது, 61 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தின் போது அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ,

No comments :

Post a Comment