கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார்..வருவார் என காத்திருக்கிறேன்: வைகோ
மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும் என நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் மதுபான கூட்டணியாக இருந்து வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
வாணியம்பாடியில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மாவட்ட மதிமுக. தேர்தல் நிதி அளிப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போழுது கூறுகையில், தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக. கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்று பேராயர் எஸ்றா சற்குணம் கூறியிருப்பது, முற்றிலும் தவறான தகவல். திமுகவினர் கூறி வருவதை அப்படியே அவர் தெரிவிக்கிறார்.
மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மேலும், எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
தமிழகத்தில் அதிமுகவும், தி.மு.க.வும் மதுபான கூட்டணியாக இருந்து வருகிறது. ஏனெனில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக வினரிடமிருந்து திமுகவினர் மது வாங்குகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவினரிடமிருந்து அதிமுகவினர் மது வாங்குகின்றனர். இது தான் கடந்த 30 வருடமாக தமிழகத்தில் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று கருணாநிதி கூறுகிறார். ஆனால், 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த கருணாநிதி ஏன் பூரண மதுவிலக்கை கொண்டு வரவில்லை?
மதுவிலக்குக்காக போராடிய சசிபெருமாள் இறந்த பின்னரும் ஆட்சியில் இருக்கும் அதிமுக மதுவிலக்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, திகமு ஆட்சிக்கு வரும்பொழுது துகருணாநிதி பூரண மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று கூறுகிறார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். எங்கள் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை என்றும் பங்கீடு முடிந்ததும் தொகுதி பட்டியல் உடனடியாக வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment