விஜயகாந்த் படத்துடன் தேமுதிக எம்எல்ஏ டிரைவர் வீட்டில் 840 கடிகாரங்கள் பறிமுதல்
தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனின் ஓட்டுநர் இல்லத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகைப்படங்களுடன் கூடிய 840 கடிகாரகங்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடு ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சுவர் கடிகாரங்கள் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும்படைக்கு தகவல் கிடைத்தது.ச்
அதன்படி, விக்கிரவாண்டி தாசில்தார் அருங்குளவன் மற்றும் பறக்கும் படையினர் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அட்டைப் பெட்டிகளுக்குள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஸ்டிக்கர் ஒட்டிய சுவர் கடிகாரம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து 21 பெட்டிகளில் இருந்த 840 சுவர் கடிகாரங்களை பறக்கும்படையினர் கைப்பற்றி அவற்றை விழுப்புரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணை முடிவில் விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளரும், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடேசனின் கார் டிரைவர் கனகராஜ் என்பவரது வாடகை வீடு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment