தேர்வு எழுத வேண்டும் என சொன்னதற்காக வீட்டிலிருந்து விரட்ட பட்ட மாணவி!

Share this :
No comments

“பெண்களுக்கான சம இட ஒதுக்கீடு”, “பெண்களுக்கான சம உரிமை” போன்றவையெல்லாம் இன்னும் பேச்சளவிலேயேதான் இருக்கின்றன. இன்றைய தேதியிலும் எத்தனையோ கிராமங்களில் அடிப்படைக் கல்வியை கூட அளிக்காமல் வீட்டு வேலைகளை கவனிக்கவும், பிள்ளை பெற்று தரும் இயந்திரமாகவும் பயன்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் பெண்கள்.

ஆனால் இந்த கொடுமைகளையும் தாண்டி தன் இலக்கை அடையும் வெகு சில பெண்களில் ஒருவராகியிருக்கிறார் பீகார் மாநிலத்தை சேர்ந்த பினா குமாரி.

எல்லாரையும் போல் படித்து, வாழ்வில் தனக்கென ஒரு அடையாளத்தை எற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இவரது லட்சியம்.

ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தலால் தனது 16 வயதிலேயே பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவைத்து திருமண வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார். அதனைத் தொடர்ந்து வீட்டு சுமையுடன் குழந்தை சுமையும் இவர் தலையில் சுமத்தப்படுகிறது.

தலையில் சுமைகளும் பொறுப்புகளும் அடுக்கப்பட்டாலும், படிக்கும் ஆர்வமோ சற்றும் குறையவில்லை பினாவுக்கு. அதனால் விடுபட்ட தன் படிப்பை மீண்டும் தொடர்கிறார்.

இது பிடிக்காத இவரது கணவரின் அம்மா, அப்பா மற்றும் தம்பி மூவரும் சேர்ந்து பினாவை, அவரது ஒரு வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே தள்ளுகின்றனர். பெற்றோர் வீட்டில் தங்கி படிக்கலாம் என்றால் அதுவோ தேர்வு மையத்திலிருந்து 15 கீ.மீ தொலைவில் உள்ளது.

இதை அறிந்த மாதேப்புரா தேர்வு அதிகாரி, தேர்வு நடக்கும் பள்ளி வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் பீனா தன் குழந்தையுடன் தங்குவதற்கு வழி செய்கிறார். அத்துடன் காவல் நிலையத்திலும் அவர் கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

தேர்வு எழுதும் போது இவர் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக பினாவின் தாயார் வரவழைக்கப்பட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியை ஆக வேண்டுமென்ற தனது கனவுக்காக எத்தனை இன்னல்களையும் தாண்டி , நடைபோட்டுக்கொண்டிருக்கிறார் பினா.

No comments :

Post a Comment