நடிகை கங்கனா ரணாவத் மனநோயாளியா?- ஹிருத்திக் ரோஷன் அறிக்கை

Share this :
No comments

டாப் நடிகர்கள் கங்கனா ரணவத் - ஹ்ரித்திக் ரோஷன் மோதல்தான் இப்போது டாக் ஆஃப் தி பாலிவுட். இருவரும் மாறிமாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கங்கனாவும், ஹிருத்திக்கும் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் உலா வந்தன.

ஹ்ரித்திக் தன் மனைவி சூசனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போகக் காரணமே இந்தக் காதல் விவகாரம்தான். ஆனால் சமீபகாலமாக ஹிருத்திக் ரோஷன், கங்கனா இடையே சுமுக உறவு இல்லை. கங்கனா ரணாவத் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஹிருத்திக் ரோஷன் பேசி வருவதாக தகவல்கள் வந்தன.

சமூக வலைத்தளங்களிலும் இப்படி அவர் எழுதி வந்தாராம். இது கங்கனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘எனது முன்னாள் காதலர் ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்?' என்று கேட்டிருந்தார். இது ஹிருத்திக் ரோஷனை கோபப்படுத்தியது. கங்கனாவுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார். அதில், ‘கங்கனாவின் பேட்டி எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது.

நாங்கள் இருவரும் காதலித்ததுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு ஏன் கங்கனா மீது கோர்ட்டில் வழக்கு தொடரக்கூடாது?' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து கங்கனாவும் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். ‘நான் உங்களைத்தான் சொன்னேன் என்று நீங்கள் எப்படி நினைக்கலாம்' என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வக்கீல் நோட்டீஸ் சண்டை இந்தி நடிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை இந்த பிரச்சினையில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த ஹிருத்திக் ரோஷன் முதல் தடவையாக தனது பக்கத்தில் உள்ள நியாயத்தை விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: ‘‘நான் இதுவரை வாய் மூடி இருந்தேன். ஆனால் எனது கவுரவத்துக்கும், குடும்பத்தினர் கவுரவத்துக்கும் தற்போது பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் எனது பெயரை யாரோ போலியாக பயன்படுத்தி அந்த நடிகைபற்றி தவறான கருத்தை பதிவு செய்து இருந்தனர்.

இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறேன். பிரபலமானவர்களுக்கு தனிப்பட்ட சொந்த விஷயங்கள் இருக்கிறது. அது பொதுவான விவாதத்துக்கு வரும்போது சர்ச்சையாகி விடுகிறது.

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று ஒருவரை பார்த்து சொல்வது எவ்வளவு மோசமான விஷயம் என்பது எனக்கு தெரியும் அலட்சியமாக ஒருவரை பார்த்து மனநோயாளி என்று இழிவுபடுத்தி பேசக்கூடிய நபர் நான் இல்லை.

எல்லோரையும் மதிப்பவன். தற்போது எனது கவுரவத்தை பாதுகாக்க அந்த நடிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். சட்டப்படி இதனை அணுகுவேன்,'' என்று கூறியுள்ளார்.



No comments :

Post a Comment