சொந்த கட்சியையே ‘ஒன்றும் செய்யவில்லை’ என விமர்சித்த சோனியா [வீடியோ]

Share this :
No comments


பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சோனியா காந்தி, எதிர்கட்சியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று தவறுதலாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ”கடந்த 2 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ்) அரசு எந்தவித பிரச்சனையையும் தீர்க்க முன் வரவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து வகைகளிலும் தோல்வியை தழுவி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இந்த பேச்சு எழுதிவைத்து படிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதுதான் என்றாலும், ஒரு கட்சித் தலைவர் தனது அரசிற்கும், மற்றொரு அரசிற்கும் வித்தியாசம் தெரியாமல் வாசித்துள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

No comments :

Post a Comment