பல பெண்களை திருமணம் செய்து நிர்வாணப் படம் எடுத்து மிரட்டும் சென்னை வாலிபர்

Share this :
No comments


தன்னுடைய கணவன் பல பெண்களை திருமணம் செய்ததோடு, தான் உட்பட பலரையும் நிர்வாணப் புகைப்படம் எடுத்து மிரட்டுவதாக சென்னையை சேர்ந்த ஒரு பெண், கண்ணீருடன் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.


சென்னை ஐ.எசி.எப் பகுதியில் வசிப்பவர் அனிதா. அவர் நேற்று கமிஷனர் டி.கே ராஜேந்திரனை சந்தித்து கண்ணீர் மல்க ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் அவரில் குறிப்பிட்டுள்ளதாவது:

என் கணவர் சென்னை ரெயில்வே துறையில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை செய்கிறார். நான் ஆசிரியராக பணி புரிகிறேன். என் கணவர் ஒரு காமக் கொடூரர். அவரிடம் ஏராளாமன ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருக்கிறது. அவர் வைத்திருந்த புகைப்படங்களில், நான் அவருடன் படுக்கையில் இருக்கும் படங்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

அந்த புகைப்படங்களை அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டேன். அதன்பின் அவரை பற்றி வெளியே விசாரித்தேன். அப்போது எனக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. அவர் என்னை திருமணம் செய்வதற்கு முன்பு, ஒரு வங்கியில் மேலாளராக வேலை பார்க்கும் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பட்டதாரி பெண்ணையும் திருமணம் செய்து அவர்களை ஏமாற்றியுள்ளார்.

அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். அந்த பெண்களின் நிர்வாணம் புகைப்படங்களையும் என் கணவர் வைத்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து 60 சவரன் நகைகள், கார், வீடு மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்து மோசடி செய்துள்ளார்.

அவர்கள் கேள்வி கேட்டால், அவர்களின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். என்னை மூன்றாவதாக திருமணம் செய்து 35 சவரன் நகைகளை பறித்துவிட்டார். தற்போது என்னுடைய ஆபாச புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். தற்போது நான்காவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், மேலும் நான்கு பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்து அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களையும் அவர் தன்னிடம் வைத்துள்ளார்.

பெண்களை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி, காம களியாட்டத்தில் ஈடுபடுவதை என் கணவர் ஒரு பொழுது போக்காகவே செய்து வருகிறார். அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment