நான் மயிலாப்பூரில் போட்டியிட வில்லை : குஷ்பு மறுப்பு

Share this :
No comments


தான் சென்னை மயிலாப்பூரில் போட்டியிடுவதாக வெளியான செய்தி வதந்தி என்று இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

குஷ்பு இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை சந்தித்து அவரின் உடல் நலம் பற்றி விசாரித்தார். அதன் பின் அங்கிருந்த நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது கூறிய அவர் “தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கேயும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மற்ற கட்சிகள் பயந்து ஓடுகிறார்கள். தாம்பரத்தை தாண்டினால் பாஜகவை யாருக்கும் தெரியாது என்று கூறினேன். இன்றும் அந்த கட்சி அதே நிலையில்தான் இருக்கிறது.

சட்டசபை தேர்தலில் போட்டியிட நான் எந்த தொகுதிக்கும் மனு கொடுக்கவில்லை. அப்படியிருக்க மயிலாப்பூர் தொகுதி எங்கிருந்து வந்தது?. எனவே அதுபற்றி வெளியான அனைத்து செய்திகளும் வதந்தியே. இதுபற்றி நான் பதில் சொன்னால் வதந்திகளுக்கு தீனி போட்டது போல் ஆகிவிடும். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் பாடுபடவேண்டும்” என்று கூறினார்.

No comments :

Post a Comment