நடிகர் விஜயகுமார் பா.ஜனதாவில் சேர்ந்தார்

Share this :
No comments


கதாநாயகனாக அறிமுகமாகி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விஜயகுமார். நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வியை தழுவினார்.

அவர் இன்று திடீரென பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். சென்னை தியாகராஜ நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு சென்ற அவர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.

பா.ஜனதா மேலிடத்தலைவர் முரளிதரராவ், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகுமாருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் சிறிது நேரம் விஜயகுமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நடிகர் விஜயகுமார் சந்திப்பு குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், நடிகர் விஜயகுமார் பா.ஜனதாவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார். அவரது வருகை பா.ஜனதாவிற்கு பலமடங்கு வளர்ச்சியை தரும் என்றார்.

No comments :

Post a Comment