மகளுக்கு திருமணம்... ஆன்மீக பயணத்தில் ராதிகா

Share this :
No comments


ராதிகாவின் மகள் ரேயானுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதனால் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வகித்துவந்த பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

தற்போது மகள் மற்றும் மகனுடன் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வருகிறார்.

நேற்று அவர் தனது மகள் ரேயான், மகன் ராகுல் சரத் ஆகியோருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். சாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த அவர் நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் அவர் கூறுகையில், "குழந்தைகளுடன் கோவிலுக்கு வர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை" என்று கூறினார்.

ரேயானுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாலேயே அவர் திருவண்ணாமலை வந்ததாக கூறப்படுகிறது.

No comments :

Post a Comment