ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா தனது காதலனுடன் ஸ்கைப் வீடியோ காலில் பேசியபடி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவில் ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா காதல் விவகாரத்தால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நிரோஷா கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும தகவல் வெளியாகியுள்ளது.
நிரோஷா செகந்திராபாத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம்வந்த நிரோஷாவின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிரோஷாவின் காதலர் கனடாவில் இருப்பதாகவும், அவர் பெயர் ரித்விக் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அவருக்கும் நிரோஷாவிற்கும் அடுத்தமாதம் திருமணம் நடைபெற இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நிரோஷாவின் இந்த முடிவிற்குக் காதல் விவகாரமே காரணம் என்று கூறப்படுகின்றது.
நிரோஷா தனது காதலருடன் ஸ்கைப் வீடியோ காலில் பேசியவாறே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.
தனது காதலருடன் வீடியோ கால் மூலம் பேசியபோது, தனது காதலரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.
பின்னர் தனது காதலனை ஸ்கையில் பார்க்கவைத்தவாறு தூக்கிட்டும் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கதறி அழுதவாறு தனது காதலி தூக்கில் தொங்கி துடிதுடித்துள்ளார். இதை நேரலையாகப் பார்த்து கதறியுள்ளார் காதலன்.
இதற்கிடையில், நிரோஷாவின் பெற்றோர் மற்றும், அவர் தங்கியிருந்த விடுதிக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, விடுதி ஊழியர்கள் நிரோஷாவின் அறைக்கதவை காவல்துறையினரின் உதவியுடன் உடைத்து, உள்ளே செல்வதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து, அவரது சடலத்தை அவர்கள் மீட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிரோஷாவின் கதாலன் விரைவில் இந்தியா திரும்பவுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் இந்த தற்கொலைக்கான காரணங்கள் முழுமையாக தெரியவரும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments :
Post a Comment