கருணாநிதியுடன்- மு.க.அழகிரி சந்திப்பு உடல் நலம் குறித்து விசாரித்தார்
சென்னை,
தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட் டார்.அதன் பிறகு தி.மு.க. பற்றியும், மு.க.ஸ்டாலின் பற்றியும் விமர்சனம் செய்து வந்தார். அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சி நடந்தது. ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவரை சந்திக்க மறுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மு.க.அழகிரி கோபாலபுரத்தில் கருணா நிதியை சந்தித்து பேசினார்.பின்னர் வெளியே வந்த அவரிடம் கேட்டபோது, ’தலைவர் உடல் நிலைபற்றி விசாரித்தேன்,
தந்தை என்ற முறையில் மரியாதைநிமித்தமாக கருணாநிதியை சந்தித்தேன்-
’ என்று கூறினார்.
மு.க.அழகிரி மீண்டும் தி.மு.க.வில் சேருவார் என்று கூறப்பட்டு வரும் சூழலில் அவர் கருணாநிதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
Labels:
politics
,
tv news
No comments :
Post a Comment