எப்போ போட்டிங்க?: ஆர்.ஜே பாலாஜியின் கிளுகிளுப்பு வீடியோ! (வீடியோ இணைப்பு)
ரேடியோவில் நிகழ்ச்சி தொகுபாளராக இருந்து, சில படங்களில் நடித்தும், சென்னை மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து பிரபலமானவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் ‘அடல்ட்ஸ் ஒன்லி’ வீடியோ ஒன்றை வெளியிட்டு மிகவும் பிரபலமாகி விட்டார்.
இவர் வெளியிட்டிருக்கும் இந்த அடல்ட்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் தலைப்பு எப்போ போட்டிங்க?.
நீங்க போட்டிங்களா?, எப்ப போடிங்க?, முதன் முதலா போடும் போது எப்படி இருந்தது?, எத்தனை வயசுல இருந்து போட்டுட்டு இருக்கீங்க?, பாதுகாப்பா போட்டிங்களா?, எங்க போட்டிங்க?, போட்டத வீடியோ, போட்டோ எதாவது எடுத்து வச்சிருக்கீங்களா என பல கேள்விகளை ஆண்கள் பெண்கள் என பலரிடம் கேட்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
இறுதியில் அவர் போட்டிங்களா என கேட்டது தேர்தலில் ஓட்டு போட்டிங்களா என்பதை தான் என விளக்கம் கொடுக்கிறார். தேர்தலில் ஓட்டு போட விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்.ஜே.பாலாஜி கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் ஆணையம் ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் ஆர்.ஜே. பாலாஜி தானாக முன் வந்து தன்னுடைய சொந்த முயற்சியில் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment