கடன் கட்டுவதா? தற்கொலை செய்வதா? - ரூ. 81 இழப்பீடு வழங்கிய அரசுக்கு விவசாயி கேள்வி
t
கடன் கட்டுவதா? தற்கொலை செய்வதா? என்று விவசாயி ஒருவர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு 81 ரூபாயை நஷ்ட ஈடு வழங்கிய சத்தீஸ்கர் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சர்குஜா என்பவர், பயிர் இழப்பீடு கோரி அம்மாநில அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளார். அதற்கு அம்மாநில அரசு வெறும் இழப்பீட்டு தொகையாக 82 ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளது.
இதனால், மனமுடைந்த விவசாயி, “இந்த தொகையை [81 ரூபாய்] வைத்து நான் கடனை அடைப்பதா? அல்லது தற்கொலை செய்துகொள்வதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் பயிர் சேதத்திற்கான இழப்பீடாக, அற்பத்தொகையை கொடுத்து வருவது குறித்து நாடு முழுவது கண்டனக் குரல்கள் எழுந்துள்ளது.
முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் புபிந்தர் சிங் ஹோடா என்ற விவாசாயிக்கு பயிர் இழப்பீட்டுத் தொகையாக வெறும் 2 ரூபாயை வழங்கப்பட்டது. அதேபோல, 2014ஆம் ஆண்டு ஜம்மு&காஷ்மிர் மாநில அரசு இழப்பீட்டுத் தொகையாக 32 ரூபாய் மற்றும் 113 ரூபாய்க்கான காசோலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment