நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்: 100 லிட்டர் ஆவின் பால் திருட்டு

Share this :
No comments


திரைப்பட நடிகர்கள் கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ஆவின் பால் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னனி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும்போது, அவர்களின் ரசிகர்கள் கட் - அவுட்டுகளை வைத்து பாலாபிஷேகம் செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது.

அதன்படி கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக, சமீபத்தில் 100 லிட்டர் ஆவின் பால் திருப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர் பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாற்றியுள்ளது.

கோயம்புத்தூரில், நேரு ஸ்டேடியம், காந்திபுரம் உள்ளிட்ட ஆவின் பால் பூத்துகளில் பெருமளவு பால் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட இந்த பூத்துகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்வதற்கான வசதிகள் இல்லை என்று கூறப்படுகின்றது.

இதையறிந்த சிலர் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் முன்னணி நடிகர்கள் இந்த விவகாரத்தில் தலையீட்டு தங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று பால் முகவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment