விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்: மும்பை நீதிமன்றம் அதிரடி!
இந்திய வங்கிகளில் 9000 கோடிகளுக்கு மேல் கடன் வாங்கிவிட்டு லண்டனில் தலைமறைவு வாழக்கை நடத்தும் விஜய் மல்லையா, வெளிநாட்டில் 950 கோடி அளவுக்கு சொத்து வாங்கியதற்காக மும்பை சிறப்பு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் ஒன்றை விஜய் மல்லையாவுக்கு ஏதிராக வெளியிட்டுள்ளது. மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினரான விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) அமலக்கத்துறையின் நடவடிக்கையால் கடந்த சில தினங்களுக்கு முன் முடக்கப்பட்டது.
இந்நிலையில் 2009-இல் ஐடிபிஐ வங்கி மூலம் அவருக்கு கொடுக்கப்பட்ட கடன் தொடர்பாக விசாரணைக்கு விஜய் மல்லையா மறுத்ததால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது மும்பை சிறப்பு நீதிமன்றம்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment