வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் கோபமடைந்த விஜயகாந்த்!
வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களிடம் கோபமடைந்து அவர்களை முறைத்து பார்த்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நான்கு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு காலதாமதமாக 8:10 மணிக்கு வந்தார் விஜயகாந்த். கால தாமதத்துக்கு கூடியிருந்த கூட்டத்தினரிடையே மன்னிப்பு கேட்டுவிட்டு விஜயகாந்த் பேச்சை ஆரம்பிக்கவும், தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்யவும் விஜயகாந்த் கோபமடைந்தார்.
கோபமடைந்த விஜயகாந்த், எங்க கட்சி கட்டுப்பாடோடு இருக்கு, கூட்டணி கட்சி தொண்டர்களும் கட்டுப்பாடோடு நடந்துக்கனும்னு கண்டிப்புடம் கூறினார். பின்னர் சிறிது நேரம் முறைத்து பார்த்த விஜயகாந்த் மீண்டும் பேச ஆரம்பித்தார்.
வழக்கமாக குட்டிக்கதை செய்து பிரச்சாரம் செய்பவர் ஜெயலலிதா. இந்த முறை விஜயகாந்தும் குட்டிக்கதை சொல்லி அசத்தினார். ஒரு குரு தன்னுடைய சீடர்கள் 50 பேரிடம். 50 பேரோ 100 பேரோ, மாம்பழமோ என்னமோ ஒரு பழத்தை கொடுத்து மறைவான இடத்தில் சாப்பிட சொன்னார்.
அதுல ஒருத்தன் மட்டும் திரும்பி குருக்கிட்டயே வந்தான். ஏன் உனக்கு மறைவான இடம் கிடைக்கலயா எல்லாரும் இடம் புடிச்சிட்டாங்களான்னு கேட்டார் குரு. எப்படி மறைத்து சாப்பிட முடியும் எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்கிட்டிருக்கானேனு அந்த சீடர் சொன்னான்.
அது போல திமுக, அதிமுக செய்யும் தவறுகளை மேல இருந்து பார்த்துக்கிட்டிருக்கான் என்று கூறினார் விஜயகாந்த். இந்த அம்மா ஹெலிகாப்டரில் உச்சி வெயில் 1 மணிக்கு வந்து ஏர்கூலரில் உட்கார்ந்துகிட்டு உங்களால் நான். உங்ளுக்காக நான்னு பேசுறாங்க. 3 மணிக்கு நடக்கும் கூட்டத்துக்கு 11 மணிக்கே நூறுக்கும், பீருக்கும், சோறுக்கும் கூட்டத்தை அழைச்சிட்டு வராங்க.
இவங்களுக்கு ஒட்டு போடனுமா, நீங்க எதுக்கு ஓட்டு போடனும் சொல்லுங்க? என்று கூட்டத்தை பார்த்து கேட்டவர். மக்கள் நலக்கூட்டணியின் அந்தந்த சின்னத்தில் ஓட்டு போடுங்க என்று குட்டிக்கதை கூறிய விஜயகாந்த் மீண்டும் தான் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment