'அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை!' -மிரட்டிய விஜயகாந்த் (வீடியோ)

Share this :
No comments

மதுரை: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'அமைதியாக இருங்கள் அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை' என்று தொண்டர்களை எச்சரித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது, ''இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் போர். தி.மு.க. தலைவர் கருணாநிதி பதவி ஆசை பிடித்தவர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பணத்தாசை பிடித்தவர். மதுரையில் துணை நகரம் அமைப்பது உள்ளிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னவாயிற்று. தேர்தல் பொதுக் கூட்டங்களுக்காக அ.தி.மு.க.வினர் மின் திருட்டில் ஈடுபடுவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை" என்றும் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். அப்போது, கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் எரிச்சலடைந்த விஜயகாந்த், "என்னை வாழ்க என்று சொல்வது அப்புறம் இருக்கட்டும். ஓட்டு போடுறாங்களான்னு பார்ப்போம். யார்ரா அது டேய்ய்... உள்ளே யார்ரா அது கத்துறது. நான் சொல்லிக்கிட்டே இருக்கிறேன் கேக்கல. அறிவு கெட்டவங்களா. இங்க இருக்கவங்க எல்லாம் சும்பப்பயலுங்களா... சொல்லிக்கிட்டே இருக்கேன் உங்களுக்கு அறிவு இல்ல. சும்மா இருக்கணும்... அப்புறம் இவங்கள விட்டே விரட்டுங்கன்னுடுவேன் பாத்துக்கோ, பேசாத இரு. ஒருத்தன் விஜயகாந்த் வாழ்கங்றான், ஒருத்தன் கத்துறான் என்ன இது" என்று ஆவேசம் அடைந்தார். அந்த நேரம் விஜயகாந்த் அருகில் ஒருவர் வந்து ஏதோ சொல்ல... ''பாத்தீங்களா அவர்தான் என்னோட அசிஸ்டெண்ட். டயம் ஆச்சு நாம போகணுமே... போகணுமே என்று சொல்கிறார். நான் பேசணும் பேசணும் என்கிறேன்" என்றார். அப்போது மீண்டும் கூட்டத்தில் கூச்சல் ஏற்பட்டது.

No comments :

Post a Comment