மொக்கை வாங்கிய நட்சத்திர கிரிக்கெட்: விஷால் நாசர் கூட்டணியின் முதல் தோல்வி!

Share this :
No comments



நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தி அதன் மூலம் வரும் நிதியை கொண்டு கட்டிடம் கட்ட நடிகர் சங்கம் முடிவெடுத்தது.

இதனையடுத்து ஏப்ரல் 17-ஆம் தேதி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிட்ட நடிகர் சங்கம் நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்தி முடித்தது.

நடிகர் அஜித் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த கிரிக்கெட் போட்டி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கிரிக்கெட் போட்டியை காண பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த நடிகர் சங்க நிர்வாகிகள் அதற்கு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியை காண மக்கள் பெருமளவு திரண்டு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் மைதானத்தில் கூட்டமே இல்லாமல் இருந்தது. இதனால் நடிகர் சங்க நிர்வாகிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

பொதுமக்கள் வரவில்லை என்று எப்படி நடிகர் சங்க நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தார்களோ அதேப்போல போட்டியை பார்க்க சென்ற மக்களும் நடிகர்களின் விளையாட்டை பார்த்து ஏமாற்றமடைந்தனர். ஒரு சில நடிகர்களை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் மிக மோசமாக விளையாடினர்.

திரையில் அடிதடி, சகலகலா வல்லவர்களாக இருக்கும் இவர்கள் நிஜத்தில் இப்படி மொக்கையாக இருக்கிறார்களே என ரசிகர்கள் பேசிக்கொண்டனர். மக்கள் திரண்டு வந்து கிரிக்கெட் போட்டியை பார்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி தரவேண்டும் என கூறிய நடிகர் சங்கத்தின் அறிவிப்புக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை நேற்று கண்கூடாக பார்க்க முடிந்தது.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடிகர்கள், ரஜினிகாந்த், கமல், பிரபு, சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா, விஜய் சேதுபதி, கார்தி, கார்த்திக், சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால், நாசர், கருணாஸ், மலையால சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நிவின் பாலி, தெலுங்கு நடிகர்கள் என நட்சத்திர பட்டாளமே வந்தது. ஆனால் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னர்களாக திகழும் விஜய் மற்றும் அஜித் இந்த போட்டியை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் கூட்டத்தை விட மக்கள் கூட்டம் குறைவாகவே வந்தது என கிண்டலாக பேசினர் நெட்டிசன்கள். சமூக வலைதளங்களிலும் இந்த கிரிக்கெட் போட்டியை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். நடிகர் சங்கம் தேர்தலில் சரத்குமார், ராதாரவி அணியை எதிர்த்து வெற்றி பெற்ற விஷால், நாசர் அணியின் முதல் தோல்வியாக இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி அமைந்துள்ளது. சரியான திட்டமிடுதலும், பொதுக்களிடம் சரியான அணுகுமுறையும் இல்லாததாலும் மக்களிடம் இந்த கிரிக்கெட் போட்டி தோல்வியடைந்துள்ளதாக பேசப்படுகிறது.

No comments :

Post a Comment