காட்டு விலங்குகளை கூண்டுகளில் அடைத்து அவற்றினை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு வைப்பதை விடுத்து, கூண்டு உள்ள வாகனங்களில் ஏறி காட்டுக்குள் சென்று விலங்குகளை பார்ப்பதே சாலச் சிறந்தது.
இங்கு இடம்பெற்ற சம்பவம் ஒன்று விலங்குகளை அவற்றின் சுதந்திரத்தை பறித்து கூண்டில் அடைத்ததனால் ஏற்பட்ட விளைவையே எடுத்துக்காட்டுகிறது. ஜப்பானின் சென்டாய் மிருகக்காட்சிச் சாலையில் பாதுகாக்கப்பட்டுவந்த ஷா ஷா எனும் சிம்பன்ஸி அங்கிருந்த தப்பித்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்தில் பாதுகாப்பாக ஏறியிருந்துள்ளது.
குறித்த சிம்பன்ஸியை காணாது 2 மணி நேரமாக தேடி பின்னர் மின் கம்பத்திலிருப்பதை அறிந்து அதனை மீட்க முனைந்துள்ளனர். அப்போதும் அது தப்பிக்க முயற்சிக்கவே பின்னர் மயக்க ஊசி அடித்து வீழத்தி பிடித்துள்ளனர்.
No comments :
Post a Comment