தமிழகத்தில் 3 மணி வரை 63.70 சதவீத வாக்குப்பதிவு

Share this :
No comments


தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மதியம் மூன்று மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் காலை முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மழை காரணமாக சில மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு மந்தாமாகியுள்ளது. அந்த பகுதியில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது.

அதற்கடுத்து, மதியம் 3 மணி நிலவரப்படி 63.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ் போட்டியிடும், பென்னாகரத்தில் அதிகமாக 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

No comments :

Post a Comment