போலீஸ் உயர் அதிகாரிகள் ஜெயலலிதாவிற்காக தோப்புகரணம் போடுகின்றனர்: வைகோ ஆவேசம்

Share this :
No comments


இந்த தேர்தலில் கலெக்டரும், போலீஸ் உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்காக தோப்புகரணம் போடுகின்றனர் என மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.

கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஜெயலலிதாவின் பங்களாவில் கண்டெய்னர் லாரி நின்றிருந்தது தொடர்பாக போலீஸில் தான் அளித்த புகாருக்கு மூன்று நாள் கழித்து அப்படி பணம் எதுவும் இல்லை என கலெக்டரும், போலீஸ் உயர்அதிகாரிகளும் பதில் தெரிவித்தனர். அப்படியென்றால் கலெக்டரும், போலீஸ் உயர்அதிகாரிகளும் ஜெயலலிதாவிற்காக தோப்புகரணம் போடுகின்றனர் என்றார்.

மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நடுநிலையாக செயல்படவில்லை எனவும், டிஜிபி அசோக் குமார் எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுபவர். அவர் பாலுக்கு காவல், பூணைக்கு நண்பன் எனவும் விமர்சித்தார்.

No comments :

Post a Comment