அதிமுக அமைச்சர்கள் 2 பேருக்கு வீட்டுக்காவல்: வைகோ பரபரப்பு பேட்டி

Share this :
No comments


நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ இரண்டு அதிமுக அமைச்சர்கள் வீட்டுக்காவலில் உள்ளதாக கூறினார்.

நத்தம் விஸ்வநாதன் புறக்கணிக்கப்படுவதை, நத்தம் புறம்போக்காகும் என நான் ஏற்கனவே கூறியிருந்ததாக கூறிய வைகோ, முக்கிய அதிமுக அமைச்சர்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஊழல் நிறைந்த அதிமுக மீ்ண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அதற்கான நடவடிக்கையை மக்கள் நல கூட்டணி எடுத்து வருகிறது என்றார். மேலும் ஜி.கே. வாசன் தங்கள் கூட்டணிக்கு வருவார் என நம்பிக்கை தெரிவித்தார் வைகோ.

No comments :

Post a Comment