ஜெயலலிதா ஜெயிலுக்கு போக எருமை மாடு பலி கொடுத்த ஓ.பி.எஸ்?

Share this :
No comments


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் நிரந்தரமாக ஜெயிலுக்கு போகவும், தான் முதல்வராக வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் எருமை மாடு பலி கொடுத்ததாக பேசப்படுகிறது. இது தான் ஓ.பன்னீர் செல்வம் ஓரங்கட்டப்பட்டதுக்கு காரணம் என கூறுகிறார்கள்.

அதிமுக-வில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக வலம் வந்தவர் ஓ.பி.எஸ். இரண்டு முறை ஜெயலலிதா முதல்வராக முடியாமல் போன நிலையில் ஜெயலலிதாவால் சுட்டிக்காட்டப்பட்டு இரண்டு முறையும் முதல்வராக இருந்தவர்.

அதிமுக-வில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ஓ.பி.எஸ். ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தார் கட்சியில். ஆனால் தற்போது அவர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். அவர் குறித்து தினம் தினம் பல பகீர் தகவல்கள் வெளிவந்தவாரே உள்ளன.

தற்போது அவர் ஜெயலலிதா ஜெயிலுக்கு செல்ல யாகம் நடத்தி எருமைமாடு பலி கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நிரந்தரமாக தான் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில், சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் நிரந்தரமாக சிறைக்கு செல்ல பெங்களூரில் உள்ள புகழ் பெற்ற கோவில் ஒன்றில் யாகம் ஒன்றையும் வளர்த்ததோடு, எருமை மாடு ஒன்றையும் பலி கொடுத்தாராம் ஓபி.எஸ்.

இந்த தகவல்களை ஆதாரங்களுடன் உளவுத்துறை ஜெயலலிதாவிடம் கொடுத்ததாம் இதனால் ஆடிப்போன போயஸ் கார்டன் வட்டாரம் ஓ.பி.எஸ்-ஐ தற்போது புரட்டி எடுத்து வருகிறதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து உளவுத்துறை கொடுத்த பல தகவல்களின் பேரில் தான் தற்போது ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம். அவர் கட்சியில் ஓரங்கட்டப்படுவதற்கு இது தான் காரணம் என பேசப்படுகிறது.

No comments :

Post a Comment