90 கோடி கல்லா கட்டிய ஓ.பி.எஸ்?: தூக்கி அடித்த ஜெயலலிதா!

Share this :
No comments


அதிமுகவில் சர்வ செல்வாக்கோடு வலம் வந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று கட்சி தலைமையால் அதிரடியாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார். ஜெயலலிதாவின் இந்த திடீர் கோபத்திற்கு தினம் தினம் பல காரணங்கள் கூறப்படுகிறது.

அந்த காரணங்களின் வரிசையில் இதுவும் முக்கியமான ஒன்று. அதிமுக-வில் தனது ஆதரவாளர்களை அதிகமாக்கி கட்சியையும், முதல்வர் பதவியையும் கைப்பற்ற ஓ.பி.எஸ் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

வருகிற சட்டசபை தேர்தலில் தனக்கு வேண்டிய பலருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க முயற்சி செய்த்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்களிடம் இருந்து வசூல் வேட்டையும் நடத்தியுள்ளார் ஓபிஎஸ். சுமார் 90 கோடி ரூபாய் அவர் வசூலித்ததாக கூறப்படுகிறது.

தான் சொல்வதை செய்ய தயாராக இருக்கும் நபர்களை தான் அவர் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பின் இவர்களை வைத்து தனது முதல்வர் பதவி ஆசைக்கு காய் நகர்த்த திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவுக்கு தகவல் கிடைத்ததாம்.

இவர் மீது இது மாதிரி பல புகார்கள் உளவுத்துறை மூலம் ஜெயலலிதா கவனத்துக்கு சென்றுள்ளது. இதனால் தான் அடுத்தடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதாவால் கழட்டி விடப்படுவதாக கூறப்படுகிறது.

No comments :

Post a Comment