பொய் கணக்கு காட்டிய ஜெயலலிதா: ஆச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் வாதம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜராகி வாதாடி வரும் ஆச்சார்யா இந்த வழக்கில் ஜெயலலிதா போலி ஆவணங்களை தாக்கல் செய்து கணக்கு காட்டியுள்ளதாக கூறினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக தரப்பிலும், அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்ந்து மூன்று நாட்கள் கர்நாடக வழக்கறிஞர் ஆச்சார்யா வாதாடி வருகிறார்.
இன்று ஆஜராகி வாதாடிய ஆச்சார்யா, நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை சந்தா மூலம் ரூபாய் 10 கோடி வருமானம் வந்ததாக ஜெயலலிதா போலி ஆவணம் தந்துள்ளார். வழக்கு காலத்தில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் சந்தா பெறும் முறையே கிடையாது என்றார் ஆச்சார்யா.
ஜெயா பப்ளிகேஷன் மூலம் ரூபாய் 4 கோடி வருமானம் வந்ததாக ஜெயலலிதா கணக்கு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் வருமான வரி செலுத்தியதோ ரூபாய் 1.15 கோடிக்கு மட்டும்தான். இந்த இரண்டு நிறுவனங்கள் மூலம் காட்டப்படும் 14 கோடியில் 1.15 கோடிதான் வருமானமாகும். மீதமுள்ள ரூபாய் 13.75 கோடியை ஜெயலலிதாவின் வருமானமாக சேர்க்க கூடாது என ஆச்சார்யா வாதிட்டார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment