ஷகிலாவின் வாழ்க்கை சினிமாவாகிறது : சன்னிலியோன் நடிக்கிறாரா?
கவர்ச்சி நடிகை ஷகிலாவின் சொந்த வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட உள்ளதாகவும், மும்பை கவர்ச்சி நடிகை சன்னிலியோனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஷகிலா தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக நடத்தவர் ஷகிலா. இவருக்கு கேரளா மட்டுமில்லாமல், தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் படங்களை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதிய காலமுண்டு. மலையாள சூப்பர் ஸ்டார்களான, மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் படங்களை விட ஷகிலாவின் படம் அதிக வசூலை கேரளாவில் வசூலித்தது.
இதனால் கோபமடைந்த கேரள சினிமா உலகம், இவருக்கு எதிராக சதிவலை செய்து அவருக்கு கேரளாவிலிருந்து வெளியேற்றியது. அதன்பின் அவர் அவ்வப்போது தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
அவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “ நான் தற்போது தமிழில் சில படங்கள் நடித்து வருகிறேன். மலையாளத்தில் நான் நடித்த 23 படங்கள் திரைக்கு வராமல் முடங்கியுள்ளன. பல்வேறு காரணங்களை சொல்லி அந்த படங்களுக்கு தணிக்கை குழிவினர் சான்று அளிக்க மறுத்து விட்டனர்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால், இயக்குனராக முடிவெடுத்தேன். ஆனால், அந்த வேலை கடினமாக இருந்ததால் தற்போது அந்த முடிவை ஒத்தி வைத்துள்ளேன். என் வாழ்க்கையை படமாக எடுக்க அனுமதி அளித்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் இந்த படம் தயாராகிறது.
எனது வேடத்தில் நடிக்க மும்பை நடிகைகள் பிபாசு பாசு, சன்னிலியோன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது” என்று கூறினார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment