ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனில் நடந்த ஆப்ரேஷன் : பீதியை கிளப்பும் பிரேமலதா

Share this :
No comments


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சமீபத்தில் போயஸ் கார்டனில் அறுவை சிகிச்சை நடந்ததாக விஜயகாந்த் பிரேமலதா பரபரப்பான கருத்தை கூறியுள்ளார்.

தேமுதிக சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

“கேப்டன் எப்போதும் மக்களுக்காக யோசிப்பவர். அதனால்தான் மக்கள் நலக் கூட்டணியினருடன் கூட்டணி வைத்துள்ளார். அவரை பற்றி தவறான தகவல்களை பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம்.

தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. நம் கட்சியிலிருந்து எட்டு துரோகிகள் விலகி அதிமுகவிற்கு சென்றனர். அவர்களின் அரசியல் எதிர்காலம் சூனியம்தான். தேமுதிகவில் நேர்காணலை கேப்டனே நடத்துகிறார். திமுகவில் கருணாநிதியும், ஸ்டாலினும் நடத்துகிறார்கள். அது சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் செய்தி தாள்களில் வெளியாகியுள்ளது. ஆனால், அதிமுகவில் நேர்காணல் யார் நடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

இன்றைக்கு எனக்கு கிடைத்த தகவலை சொல்கிறேன். பத்து நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிலேயே ஒரு ஆப்ரேஷன் தியேட்டரை தயார் செய்து அவருக்கு ஒரு ஆப்ரேஷன் நடந்துள்ளது. அதனால், அவர் வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார். இதை எழுத எந்த பத்திரிக்கைக்காவது தைரியம் இருக்கிறதா?” என்று பேசி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் பிரேமலதா.

No comments :

Post a Comment