பறக்க ஆரம்பிக்குது விஜய் சேதுபதியின் றெக்கை
தொடர்ச்சியான மூன்று ஹிட்டுகள் தந்த விஜய் சேதுபதி ஆக்ஷனில் அழுத்தமாக கால் பதிக்க நினைக்கும் படம், றெக்கை. ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்த கணேஷ் - விஜய் சேதுபதியின் பினாமி - தயாரிக்கும் இந்தப் படம் முழுக்க கமர்ஷியல் அம்சங்களோடு தயாராகிறது.
இந்தப் படத்தில் முதல்முறையாக லட்சுமி மேனன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளார். வா டீல் படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் இந்தப் படத்தின் போட்டோஷுட் சமீபத்தில் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.
விஜய் சேதுபதி தன்னை கமர்ஷியல் ஹீரோவாக முன்னிறுத்தும் முதல் படம் என்ற வகையில் றெக்கை முக்கியமாகிறது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment