தேமுதிகவை உடைக்க அதிமுக, திமுக வியூகம்? : விஜயகாந்த் அதிர்ச்சி
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தேமுதிகவில் பிளவை உண்டாக்கி, அந்த கட்சியை முடக்க முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு எதிரான ஓட்டுகளை பெறுவதில் தேமுதிக கட்சியே முன்னணியில் இருக்கிறது. அதனால்தான் கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே 8.33 சதவிகித ஓட்டுகளைப் பெற்றது.
அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக, 29 எம்.எல்.ஏக்களைப் பெற்று, விஜயாகாந்த் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார். ஆனால், சில மாதங்களிலேயே தேமுதிகவிலிருந்து 8 எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் தாவினர். சமீபத்தில் அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ததில், விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதவியை இழந்தார்.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில், அதிமுகவை வீழ்த்த எப்படியாவது, தேமுதிகவை தன் பக்கம் இழுக்க திமுக தரப்பு முயன்றது. ஆனால் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியினருடன் இணைந்துவிட்டார். இது திமுக தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே, விஜயகாந்த திமுகவில் கூட்டணி வைக்காத அதிருப்தியில் இருந்த சில தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் சில தேமுதிக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
அதன் தொடக்கமாக, தேமுதிக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் நேற்று, திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல், தேமுதிவிலிருந்து ஏற்கனவே 8 எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்த அதிமுகவும், தேமுதிக கட்சியில் பிளவு ஏற்படுத்துவதற்காக, தேமுதிக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ள நிலையில், தேமுதிகவை இரண்டாக உடைத்து, முரசு சின்னத்தை முடக்கும் வேளையில் திமுக, அதிமுக கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேமுதிக தலைமை அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment