தேறியது தோழா, மற்றவை ஜீரோ
கடந்த வெள்ளிக்கிழமை தோழா, வாலிபராஜா, அடிடா மேளம், ஜீரோ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இதில் தோழா மட்டுமே தேறியுள்ளது.
பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸ் படத்தின் உரிமையை முறைப்படி வாங்கி தோழா படத்தை எடுத்தனர். படம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்துள்ளது.
ஜீரோ படத்தை தனஞ்செயன் தயாரித்திருந்தார். சிட்டியில் மட்டும் படம் சுமாராகப் போகிறது. மற்ற இடங்களில் படத்தை சீண்டவும் ஆளில்லை. சந்தானம் நடித்த வாலிபராஜாவும், அடிடா மேளமும் அனைத்து இடங்களிலும் தோல்வியை பதிவு செய்துள்ளன.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment