ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Share this :
No comments



வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் டுவென்டி - 20 உலக கோப்பை தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடந்த பிரிவு - 2 லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் இடையே அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார்.

இந்திய அணியில், ரோகித் 18 ரன்களும், சேகர் தவான் 23 ரன்களும், கோஹ்லி 24 ரன்களும், ரெய்னா 30 ரன்களும், பாண்ட்யா 15 ரன்களும், யுவராஜ் வெறும் 3 ரன்களில் திரும்பினார். இறுதியில் கேப்டன் தோனி (13 ரன்களுடன்), அஷ்வின் (5 ரன்களுடன்) அவுட்டாகாமல் இருந்தனர். ஆக மொத்தம் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச அணி களமிறங்கியது. இதில், இக்பால் 35 ரன் எடுத்தார். மிதுன் 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது, பாண்ட்யா பவுலிங் செய்தார்.

மூன்று பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 4 ஆவது 5 ஆவது பந்தில் முஷ்பிகுர் (11), மகமதுல்லா (18) அவுட்டானார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் தோனி முஸ்தபிஜுரை (0) ரன்அவுட் செய்தார். வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

No comments :

Post a Comment