மணிரத்னம் படத்தில் பைலட்டாகும் கார்த்தி
மணிரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி, சாய் பல்லவி நடிக்கின்றனர். விரைவில் இதன் படப்பிடிப்பு ஜுன் மாதம் தொடங்க உள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கார்த்தி வெளிநாடுவாழ் இந்தியராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் பைலட்டாக அவர் பணிபுரிவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சாய் பல்லவி டாக்டராக வருகிறார்.
படத்தின் ஸ்கிரிப்டுக்கு கொடைக்கானலில் இறுதிவடிவம் கொடுத்த மணிரத்னம் ஜுனில் படப்பிடிப்பை தொடங்குகிறார்.
கஷ்மோரா படத்துக்காக மெட்டை அடித்த கார்த்தி முடி வளர்க்கவே இந்த காலஅவகாசம் என கூறப்படுகிறது.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment