முதலாளிகள் தவறு செய்வது உலக இயல்புதான் - மத்திய அமைச்சர் விளக்கம்
கார்ப்பரேட்டுகள் உலகம் முழுவதும் தவறு செய்வது சகஜமானது என்றும் மல்லையாவின் தவறை வைத்து அவர்களை எடைபோடக்கூடாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நிர்மலா சீத்தாராமன் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, மல்லையாவின் குற்றத்தினால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ”உலகம் முழுமையும் கார்ப்பரேட்டுகள் தவறு செய்கின்றன. இது குறித்து பல்வேறு வேறுபட்ட கதைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்தியாவில் மட்டுமல்ல. எனவே மல்லையாவை வைத்து கார்ப்பரேட்டுகள் செய்த நல்ல விசயங்களை குறைந்து எடை போடக்கூடாது.
இந்தியாவிலிருந்து பல பன்னாட்டு கம்பெனிகள் உலகம் முழுவதும் நன்றாக செயல்படுகின்றன. அதனால் மல்லையாவின் விசயம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment