3 வருட பணிக்குப் பிறகு விடைபெற்றது ராஜ்கமல்
இந்திய கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பலான ஐ.சி.ஜி.எஸ். ராஜ்கமல் மற்றும் அதன் ஆறு துணைக்கப்பல்கள் கிழக்கு பிராந்தியத்தில் பணியை முடித்து அந்தமான் நிக்கோபார் தீவுக்கு புறப்பட்டு சென்றன.
கப்பல்களை வழியனுப்பும் விழா வெள்ளியன்று (மார்ச் 25) சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிழக்கு பிராந்திய டி.ஐ.ஜி எம்.ஏ.தல்கா கலந்து கொண்டு கப்பல்களை வழியனுப்பி வைத்தார். ஐ.சி.ஜி.எஸ் ராஜ்கமல் உள்நாட்டில் தாயரிக்கப்பட்ட கடலோர காவல்படை ரோந்து கப்பல் வரிசையில் நான்காவது கப்பலாகும்.
இந்த கப்பலானது 8 ஜனவரி 2013 சென்னையில் கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது. கிழக்கு பிராந்தியத்தில் 3 வருடம் 3 மாதம் பணியாற்றியுள்ள இந்த கப்பல் 484 நாட்கள் ரோந்து பணியில் ஈடுபட்டது. இதன் பணிக்காலத்தில் 5 இலங்கை கப்பல்களை மடக்கியுள்ளது.
இலங்கை கடற்படையிரானல் விடுவிக்கப்பட்ட 52 படகுகளையும் 351 மீனவர்களையும் இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டுவந்து சேர்த்துள்ளது. பணியில் இருந்து ஓய்வுபெறுவதால் இந்த கப்பல் மூன்று நாட்களில் 750 கடல் மைல் தூரம் பயணம் செய்து மார்ச் 28 அன்று அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேர் துறைமுகத்தை சேரும்.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்கமல் மற்றும் ஆறு துணைக்கப்பல்களின் தளபதிகள், கடலோர காவல் படையின் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment