கணவரின் அடி உதையை தாங்க முடியவில்லை : பிரியங்கா கபூர் தற்கொலை
தனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல், டெல்லியின் பிரபல மாடல் அழகி பிரியங்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியை சேர்ந்த 25 வயது மாடல் அழகி பிரியங்கா கபூர், கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாசற்கதவு உட்பக்கம் பூட்டியிருந்தாதால், போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் இரண்டு பக்கமுள்ள ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில் “எனக்கு யாரும் இல்லை என்ற ஆதங்கத்தில் என் கணவர் நிதினை அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அவர் என்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார்.
நான் வெளியே செல்வதை அவர் தடுக்கிறார். என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார். ஆனால் நானோ இந்த உலகை விட்டே போகிறேன். என்னால் இனிமேல் அவரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்காவின் கணவர் நிதின் ஏராளமான வரதட்சணை வாங்கி கொண்டதாகவும், மேலும் அவரை கொடுமை படுத்தியதாகவும், பிரியங்காவின் சகோதரி டிம்பி கபூர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நிதினை கைது செய்துள்ள போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment