விஜயகாந்தை வைகோ கொச்சைப்படுத்தி விட்டார்: தமிழிசை சவுந்திரராஜன்
பாஜக தேமுதிகவிடம் பேரம் பேசியதாக கூறி விஜயகாந்தை வைகோ கொச்சைப்படுத்தி விட்டார் என்று பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுகவும் பாஜகவும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டன.
இந்நிலையில் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் திமுகவும், பாஜகவும் விஜயகாந்திடம் பேரம் பேசியதாக வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.
அதன்படி பாஜக சார்பில் மேல்சபை எம்.பி. பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் தருவதாக விஜயகாந்திடம் பேரம் பேசப்பட்டதாக குற்றம் சாற்றினார்.
மேலும், திமுக தரப்பில் 80 தொகுதிகளும், 500 கோடி ரூபாய் பணமும் தருவதாக திமுக தலைவர் கருணாநிதி தனது கைப்பட துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தாக கூறினார்.
வைகோவின் இந்த குற்றச்சாட்டை தமிழிசை சவுந்திரராஜன் மறுத்துள்ளார்.
இது குறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:–
அரசியலுக்காக பொத்தாம் பொதுவாக வார்த்தைகளை அள்ளி வீச கூடாது. ஆதாரம் இல்லாமல், அதிகாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது சரியல்ல.
வைகோ பேரம் படியவில்லை என்று கூறியிருக்கிறார். எதனால் படியவில்லை என்பதையும் அவர் விளக்கி இருக்க வேண்டும்.
இதன் மூலம் வைகோ விஜயகாந்தையும் அவரது மனைவி பிரேமலதாவையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். என்று கூறியுள்ளார்.
திமுக தரப்பிலிந்து வைகோ தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால் இது குறித்து வழக்கு தொடரப்படும் என்றும்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment