நடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் மரணம்

Share this :
No comments


தமிழ் சினிமாவில் பழமையான நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் இன்று மரணமடைந்தார்.

கே.ஆர் விஜயா தமிழ் சினிமாவில் ‘கற்பகம்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழில் ஏராளமான படங்களில் நடித்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்பேதே 1966ல் பிரபல தொழிலதிபர் வேலாயுதத்தை திருமனம் செய்தார். அவர் பிரபல நிதி நிறுவனமான சுதர்ஸன் சிட் பண்டின் சேர்மனாக இருந்தார்.

வேலாயுதம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார்.

வேலாயுதம்-கே.ஆர்.விஜயா தம்பதிகளுக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார்.

No comments :

Post a Comment