மக்களை நம்பி பாமக தனியாக போட்டியிடுகிறது - ராமதாஸ்

Share this :
No comments


வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமக மக்களை நம்பி தனியாக போட்டியிடுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஆரணி அடுத்த விண்ணமங்கலம், பூசிமலைகுப்பம், பாளைய ஏகாம்பரநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் பாமகவின் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய ராமதாஸ், ‘’தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றப்போகும் சட்டமன்ற தேர்தல் இன்னும் 46 நாட்களில் நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் பாமக மக்களை நம்பி தனியாக போட்டியிடுகிறது.

பாமக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் மது, ஊழல் அடியோடு ஒழிக்கப்படும். ஒரு துளி மது கூட தமிழ்நாட்டில் இருக்காது. வருகின்ற தேர்தலில் ஏற்கனவே 50 ஆண்டு காலம் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பாமகவை வெற்றி பெற வைத்து ஆட்சி பீடத்தில் அமர வைத்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மேலும் தரமான கல்வி, மருத்துவம் கிடைக்கும். விவசாய வளர்ச்சிக்கு பாமக என்றுமே உறுதுணையாக இருக்கும்’’ என்று கூறினார்.

No comments :

Post a Comment