மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் வளர்மதி சர்ச்சைப் பேச்சு

Share this :
No comments


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒரு சோளக்காட்டு பொம்மை என தமிழக அமைச்சர் வளர்மதி கூறிய பேச்சு குறித்து தேர்தல் அலுவலரிடம் திமுக ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியையும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை தனிப்பட்ட முறையில், தமிழக அமைச்சர் வளர்மதி கூறியதாக புகார் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அமைச்சர் வளர்மதி மீது, தேர்தல் கண்காணிப்பாளர் ஆர்.டி.ஓ. விஜய் பாபுவிடம், சேலம் திமுக மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 21 ஆம் தேதி சேலம் வந்த, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, திமுக தலைவர் கலைஞரையும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் ஒருமையில் அவன், இவன் என்று திட்டியது மட்டுமின்றி, சோளக் காட்டு பொம்மை ஸ்டாலின் என்று கொச்சைப்படுத்தியுள்ளார். அவரது பேச்சு தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் யாரையும் ஒருமையில் பேசவோ, திட்டவோ கூடாது என்று கூறிய நிலையில், அமைச்சர் வளர்மதி பேசியிருப்பது அவரை சிக்கிலில் சிக்கவைத்துள்ளது.

No comments :

Post a Comment