சிரஞ்சீவியின் மகளுக்கு இரண்டாவது திருமணம்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவுக்கு இரண்டாவது திருமணம் நாளை மறுநாள் நடக்கிறது. மணமகன் சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பரின் மகன் கல்யாண்.
ஸ்ரீஜா 2007-ல் தனது 18 வயதில் வீட்டை விட்டு ஓடி சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
அப்போது தந்தை மற்றும் உறவினர்களால் தங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்றும், எனவே பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். பல மாதங்கள் சிரஞ்சீவி வீட்டுக்கு செல்லாமலேயே இருந்தார்.
அதன்பிறகு மீண்டும் பெற்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. தந்தை வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று கணவர் சிரிஷ் பரத்வாஜ் குடிபோதையில் தினமும் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்தார்.
கணவனுடன் வாழ முடியாது என்று கூறி சிரஞ்சீவி வீட்டிலேயே வந்து தங்கி விட்டார். பின்னர் கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தாக்கல் செய்தார். அவருக்கு விவாகரத்தும் கிடைத்து விட்டது.
இப்போது பெற்றோரின் விருப்பப்படி பணக்காரரான கல்யாண் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். கல்யாண் சிரஞ்சீவிக்கு நெருக்கமான தொழிலதிபரின் மகன்.
வரும் 28 -ஆம் தேதி இவர்களின் திருமணம் நடக்கிறது. 31 -ஆம் தேதி பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment