தேமுதிகவிற்கு எதிரான ஸ்டாலின் ஆட்டம் ஆரம்பம்: மேலும் ஒரு மாவட்ட செயலாளர் திமுகவில் இணைந்தார்!

Share this :
No comments


கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தினேஷ் இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக, திமுக உடனே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்புக்கும் மாறாக விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்தார்.

இதனால் தேமுதிகவில் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகளை திமுக பக்கம் இழுக்கும் வேலைகளில் திமுக செயல்படும் எனவும் பேசப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் வடசென்னை தேமுதிக செயலாளர் யுவராஜ் திமுக தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தேமுதிக நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தைகளை கூறி திமுக தன் பக்கம் இழுப்பதாக திண்டுக்கலில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா குற்றம்சாட்டினார். மேலும் ஸ்டாலின் இது போன்ற கேவலமான அரசியலை நிறுத்த வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தினேஷ் இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதனால் தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து எந்தெந்த நிர்வாகிகள் கட்சி மாற இருக்கிறார்களோ என்ற பயத்திலே இருப்பதாக கூறப்படுகிறது.

No comments :

Post a Comment