ஆர்யாவின் தந்தையாக நடிக்கும் சூப்பர் சுப்பாராயன்
சூப்பர் சுப்பாராயனின் பெயரை அறிந்தவர்களுக்கும் ஆள் எப்படியிருப்பார் என்று தெரியாது. கொம்பன் படத்தில் அட்ட கறுப்பில் வரும் வில்லன்தான் சூப்பர் சுப்பாராயன்.
அவர்தான் ஆர்யாவின் புதிய படத்தில் ஆர்யாவின் தந்தையாக நடிக்கிறார்.
ஆர்யாவின் கலருக்கும், களைக்கும் சூப்பர் சுப்பாராயனின் இருட்டு கலர் மொரட்டு காம்பினேஷன் ஆயிற்றே என்று யோசிக்கலாம். அங்குதான் இருக்கிறது ட்விஸ்ட்.
மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில், ஆர்யா காட்டுவாசியாக வருகிறார். கறுப்பு மையெல்லாம் பூசி ஆளையே மாற்றப் போகிறார்கள் என்று பேச்சிருக்கிறது. அதனால்தான், அவருக்கு பொருத்தமாக சூப்பரை அப்பாவாக்கியுள்ளனர்.
கேரளா மற்றும் தமிழக காட்டுப்பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment