வி.வி.மினிரல்ஸ் உள்ளிட்ட 32 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மணல் அள்ளும் உரிமம் ரத்து

Share this :
No comments


வி.வி.மினிரல்ஸ், டிரான்ஸ்வேல்ட் உள்ளிட்ட 32 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்ட் உள்ளிட்ட 32 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

இதனை எதிர்த்து, சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. மேலும்,, வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட 32 நிறுவனங்கள் கனிம மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட உரிமங்களும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

No comments :

Post a Comment