ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை அதிகாரம் மாநில அரசிடமே இருக்க வேண்டும்: ராம் ஜெத்மலானி
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசிடமே இருக்க வேண்டும் என குற்றவாளி முருகன் தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
குற்றப்பிரிவு தண்டனை 433 ஏ பிரிவில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம், மாநில அரசுகளிடம் தான் இருக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தனது வாதத்தில் தெரிவித்துள்ளார். சிறை நிர்வாகம், சிறைத்துறை சட்டங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், சிறை நிர்வாகத்துக்குத்தான் கைதிகளின் மனநிலை நடவடிக்கை குறித்து தெரியும் என்றும் ராம் ஜெத்மலானி தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறைத்துறை அதிகாரிகளுக்குத்தான் கைதிகளை விடுதலை செய்யலாமா என்பது குறித்து பரிந்துரை செய்ய முடியும் என தெரிவித்த ராம் ஜெத்மலானி, ஆயுள்தண்டனை 14 வருடம் போதுமானது என பல கட்டங்களில் விவாதித்துவிட்டதாகவும் மீண்டும், அதுகுறித்து ஆய்வு செய்ய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் வழக்கறிஞர்கள் வாதத்தை முடித்து விட்டனர். இதையடுத்து, மத்திய அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், தனது இறுதி வாதத்தை முன் வைக்க உள்ளார். ராஜீவ் கொலை வழக்கு குறித்த, அனைத்து வாதங்களையும் இன்றுடன் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment