பெல்ஜியம் தலைநகரில் வைக்கப்பட்ட குண்டுவெடிப்பினால், விமான நிலையத்தில் 14 பேரும், ரயில் நிலையத்தில் 20 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக இப்போது வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஜாவுண்டெம் விமான நிலையத்தில் இடம்பெற்ற முதல் தாக்குதல்
விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தற்கொலை பெல்ட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
நடைபெற்றுள்ள இரண்டு தாக்குதல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களே என பெல்ஜியத்தின் தலைமை அரச வழக்கறிஞர் கூறுகிறார்.
ஜாவெண்டென் விமான நிலையத்தில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன
இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், ஊகங்களின் அடிப்படையில் சிலர் கருத்துக்களை கூறி வருவதாக பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் டிடியே ரெய்ண்டர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரில் உடலுக்கு அருகில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட சிலர்
இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சர் கூறுகிறார். விமான நிலையத்தில் 81 பேரும், ரயில் நிலையத்தில் 55 பேரும் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரஸல்ஸ் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என பெல்ஜியப் பிரதமர் ஷார்ல் மிஷேல் கூறுகிறார்.
எது நடைபெறும் என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்தோமோ அது நடைபெற்றுவிட்டது எனக் கூறியுள்ள அவர், மிகவும் துக்ககரமான ஒரு நேரத்தை நாடு எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத் தலைநகர் பிரச்ஸ்லில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளதாக பிரஸல்ஸிலுள்ள பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
பல இடங்களில் இராணுவத்தினர் கூடுதலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக பெல்ஜிய பிரதமர் ஷார்ல் மிஷேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பெல்ஜியம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் 14 பேரும் ரயில் நிலையத்தில் 20 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக இப்போது வரும் தகவல்கள் கூறுகின்றன.
No comments :
Post a Comment